திண்டுக்கல், பாரதிய இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் தர்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு, விநாயகர் சிலையுடன் சென்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், தமிழக அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கச்சத்தீவில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய வேண்டும், என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் பாரதிபுரத்தில் இருந்து கச்சத்தீவுக்கு செல்லப்போவதாக பாரதிய இந்து மக்கள் கட்சியினர் அறிவித்தனர். இதையடுத்து கட்சியின் நிறுவன தலைவர் தர்மா தலைமையிலான அந்த கட்சியினர் கச்சத்தீவில் வைத்து வழிபாடு நடத்துவதற்காக 3 அடி உயர விநாயகர் சிலை, பாரத மாதா உருவப்படம் ஆகியவற்றுடன் புறப்பட்டனர். தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவர்களை தடுத்து நிறுத்தினர். கச்சத்தீவுக்கு செல்ல முயன்றதாக நிறுவன தலைவர் தர்மா உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த விநாயகர் சிலையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/10-people-arrested-while-attempting-to-travel-to-katchatheevu-with-a-vinayagar-idol




