காஞ்சீபுரம், காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே சிக்கராயபுரம் பகுதியில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டதாக பரவிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி, தன்னிடம் மர்ம நபர் ஒருவர் சாக்லேட் கொடுத்து ஆட்டோவில் ஏற சொன்னதாகவும், தான் அங்கிருந்து தப்பி ஓடி வந்துவிட்டதாகவும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவிய நிலையில், பெற்றோர் அனைவரும் தங்கள் பிள்ளைகளை தேடத் தொடங்கினர். அப்போது 2 சிறுவர்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் பதறிப்போன அந்த சிறுவர்களின் பெற்றோர், தங்கள் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதில் சிறுவர்கள் ஆட்டோவில் கடத்தப்பட்டது தொடர்பாக எந்த காட்சிகளும் பதிவாகவில்லை. மாறாக இருவரும் அருகில் உள்ள தெருவில் நடந்து சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் அங்குள்ள ஒரு வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த 2 சிறுவர்களையும் கண்டுபிடித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுவர்கள் யாரும் கடத்தப்படவில்லை என்பதை அறிந்து அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். அதே சமயம், சிறுமிடம் சாக்லேட் கொடுத்து ஆட்டோவில் ஏற சொன்ன மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/reports-of-children-being-abducted-in-an-auto-rickshaw-spark-panic-in-kancheepuram




