துபாய், நஷ்ரா சந்துவின் அபார பந்துவீச்சு காரணமாக ஹாங்காங்கை வீழ்த்தி பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது. பெண்கள் ஆசிய கோப்பை பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகளும் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் - ஹாங்காங் மோதல் இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. அசத்திய நஷ்ரா சந்து இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணிக்கு, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஹாங்காங் அணி, 19 ஓவர்களில் 71 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதில் பாகிஸ்தான் அணியின் நஷ்ரா சந்து அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அரையிறுதிக்கு தகுதி இதன் மூலம் ஹாங்காங் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான், பெண்கள் ஆசிய கோப்பை டி20 தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/sundhus-spell-powers-pakistan-into-asia-cup-semi-finals




