நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் காட்டு யானை கள், புலிகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதுதவிர பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விலை உயர்ந்த மரங்களும் உள்ளது. இதனால் வனப்பகுதியை பாதுகாப்பது, வன குற்றங்களை தடுப்பது தொடர்பான பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தினமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி வனச்சரகத்துக்கு உட்பட்ட அவரல்லா பிரிவு குதிரைப்பாறை வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண் காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்தனர். ஆனால், யானை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புலிகள் காப்பக இயக்குனர் கிருபா சங்கர் உத்தரவின்பேரில், துணை இயக்குனர் வித்யாதர், வனச்சரகர் ராஜன் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-wild-elephant-was-found-dead-in-the-masinagudi-forest-area




