சென்னை, தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதனை சந்தித்து, கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்தேன். கோரிக்கை மேலும், வேடசந்தூர் மற்றும் மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், கணினி வசதிகள், நவீன ஆய்வகங்கள், விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவும் கோரிக்கை வைத்தேன். நன்றி எனது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். அதற்காக அவருக்கு கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மிகுந்த மகிழ்ச்சி பி. விஸ்வநாதனை நாடாளுமன்ற உறுப்பினராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளராகவும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றிய அனுபவமிக்கவர். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் அவர் காங்கிரஸ் சார்பில் இடம்பெற்றிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.அவர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் உரிமையோடு கோரிக்கை மனுக்களை கொடுப்பதை காணும்போது மகிழ்ச்சியாக இருந்தது. உயர்கல்வி துறையில் உள்ள சவால்களை திறம்பட எதிர்கொண்டு, காலத்தின் தேவைக்கேற்ப பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ள முன்னேற்றங்களை உருவாக்குவார் என்று நம்புகிறேன்.விஸ்வநாதனுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அண்ணன் திரு. P. விஸ்வநாதன் அவர்களைச் சந்தித்து, கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்தேன். மேலும்,… — Jothimani (@jothims) July 3, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/establish-a-government-arts-and-science-college-in-viralimalai-mp-jothimanis-request




