சென்னை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 2-ந் தேதி நடைபெறும் தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் திமுகவேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் வருகிற 1-ம் தேதி கோவை செல்கிறார். அங்கு இரவு தங்கி விட்டு 2-ம் தேதி கார் மூலம் தாராபுரம் தொகுதிக்கு செல்கிறார். அங்கு காரில் ரோடு ஷோ சென்று பொது மக்களை சந்திக்கிறார். பொதுக்கூட்டம் மாலையில் தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த பொதுக் கூட்டத்தில் தோழமை கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரசார கூட்டத்திற்கு பிறகு மறுநாள் 3-ம் தேதி மதுராந்தகம் சென்று அங்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். இதையொட்டி மு.க. ஸ்டாலினின் தேர்தல் பிரசார சுற்றுப் பயண ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/mk-stalins-campaign-in-tarapuram-on-the-2nd




