தணிக்கை வாரியம் ‘டாக்ஸிக்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் 3.14 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படமாக வரும் 26 ஆம் தேதி திரைக்கு வருகிறது. 'கே.ஜி.எப்' படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் யாஷ் நடித்துள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த கேங்ஸ்டர் டிராமா படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான 'லேடீஸ் அண்ட் லேடீஸ்' அறிமுக வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கோவா மாபியா பின்னணியில் உருவான கதை 1940 முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. டீசருக்கு கலவையான வரவேற்பு சமீபத்தில் வெளியான 'டாக்ஸிக்' டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. அதே நேரத்தில், அதில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக, சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதால் டீசர் பரபரப்பாக பேசப்பட்டது. இருந்தபோதிலும் அதிக பார்வையார்களை பெற்றது. டிரெய்லர் ரிலீஸ் இந்த படம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 'டாக்ஸிக்' திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. தணிக்கை சான்றிதழ் இந்நிலையில், தணிக்கை வாரியம் ‘டாக்ஸிக்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் 3.14 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படமாக வரும் 26 ஆம் தேதி திரைக்கு வருகிறது.: A Fairy Tale for Grown-Ups Trailer out now Kannada: Hindi: Tamil: Telugu: Malayalam: In Cinemas Worldwide from 26-08-2026.… — TOXIC (@Toxic_themovie) August 8, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/yashs-toxic-gets-a-certificate




