புதுக்கோட்டை, அமாவாசை நாளில் கோவில்களில் உண்டியல் திருடிய அமாவாசை திருடர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். உண்டியல் திருட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அடிக்கடி கோவில் உண்டியல்கள் திருடப்பட்டு வருகிறது. பல சம்பவங்களில் இதுவரை யாரும் பிடிபடவில்லை. கடந்த மாதம் அமாவாசை நாளில் கீரமங்கலம் கொடிக்கரம்பையில் ஒரு கோவிலில் திருட முயன்றபோது கிராம மக்கள் திரண்டதால் பைக் மற்றும் செல்போனை போட்டுவிட்டு தப்பி ஓடியவர்கள் சற்று தூரத்தில் ஒரு வீட்டு வாசலில் நின்ற பைக்கை திருடிச் சென்றுவிட்டனர். அதேபோல இந்த மாதம் அமாவாசை நாளில் கீரமங்கலம் காவல் சரகம் மேற்பனைக்காடு கிராமத்தில் மழைமாரியம்மன் கோவில், வீரமாகாளியம்மன் கோவில் என ஒரே இரவில் 2 கோவில்களிலும் உண்டியல்கள் திருடப்பட்டிருந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடியில் 2 கோவில்களிலும், ஆவுடையார்கோவிலில் ஒரு கோவிலிலும் உண்டியல்கள் திருட்டு நடந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தனிப்படை போலீசார் இந்த நிலையில் கோவில்களில் உண்டியல் உடைத்தவர்களை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். முதல்கட்டமாக அமாவாசை திருடர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து, பழைய வழக்குகளில் உள்ளவர்களின் கைரேகை பதிவுகளை வைத்து பார்த்தபோது சில கைரேகைகள் ஒத்துப் போனது. அதன் அடிப்படையில் அறந்தாங்கி அருகே நாகுடி வேதியன்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மகன் காளிதாஸ் சில்லரை காசு மூட்டையை தலைக்கு வைத்து படுத்திருந்தபோது தனிப்படை போலீசார் கைது செய்தனர். காளிதாஸிடம் விசாரித்தபோது, "நான் சிறையில் இருந்தபோது அறந்தாங்கியில் உள்ள திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்த கோழி திருடன் விஜய், தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுகா களசங்காடு ஆடு திருடன் கோவிந்தராஜ் மகன் நாகராஜ் ஆகியோர் எனக்கு பழக்கமானார்கள். வெளியே வந்ததும் இன்ஸ்டாகிராமில் பேசிக்கொள்வோம். அடிக்கடி அறந்தாங்கியில் சந்திப்போம். பகலில் ஊர் ஊராகப் போய் நோட்டம் பார்த்துவிட்டு பைக்குகள் கிடைத்தால் திருடுவோம். திருடுவோம். சரக்கடிப்போம் இரவில் உண்டியல்கள் உடைத்து திருடி பங்கு வைத்து செலவு செய்வோம். நன்றாக சரக்கடிப்போம்; சாப்பிடுவோம். போன மாதம் கொடிக்கரம்பையில் உண்டியல் உடைக்கும்போது, ஆட்கள் வந்ததால் பைக், செல்போனை விட்டுவிட்டு, ஒரு வீட்டு வாசலில் நின்ற பைக்கை திருடி தப்பிட்டோம். அப்போதே எங்களை பிடித்துவிடுவீர்கள் என்று நினைத்தோம். ஆனால் பிடிக்கவில்லை. அதன் பிறகு பல பைக்குகள், உண்டியல்கள் திருடிவிட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் நாகராஜை பிடிக்கும்போது ஜாக்கிரதையாக இருங்கள். யாராவது பிடிக்க வந்தால் கடித்துவிட்டு தப்பிவிடுவான் என்று கூறியுள்ளார். அதேபோல பதுங்கி இருந்த நாகராஜை போலீசார் பிடிக்கும்போது 2 பேரை கடித்துவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இருப்பினும் போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அதே போல திருநாளூர் விஜய்யையும் கைது செய்து, அமாவாசை உண்டியல் திருடர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறையில் அடைப்பு கீரமங்கலம் காவல் ஆய்வாளர் சத்தியதேவி, அவர்களிடம் விசாரணை செய்து, அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை கைப்பற்றினார். தொடர்ந்து அமாவாசை திருடர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு திருடர்களை பிடித்த ஆலங்குடி டிஎஸ்பி மனோகரன், தனிப்படை போலீசார் மற்றும் கீரமங்கலம் போலீசாருக்கு மேற்பனைக்காடு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-steal-temple-offerings-we-will-booze-if-you-catch-us-we-will-bite-amavasai-thieves




