நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 8 பேர் பலியாகியிருக்கின்றனர். மேகவெடிப்பு காரணமாக நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. This is seriously scary. CCTV footage from Gyirong Port in Tibet, China, directly opposite Nepal’s Rasuwa district. This flash flood hit here first and later caused massive havoc in Nepal. Can’t even imagine someone surviving this. Prayers for everyone affected. — Nikhil saini (@iNikhilsaini) August 26, 2026 பல முக்கியச் சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாகச் சேதமடைந்திருக்கின்றன. ஏராளாமான மக்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. இந்த வெள்ள பாதிப்பில் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், 20 பேர் மட்டுமே தங்களைத் தொடர்பு கொண்டுள்ளதாக கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா சுற்றுலா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு இன்று காலை திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கியுள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்றவர்களில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாக தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என சாதிக் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/environment/disasters/sudden-flash-floods-in-nepal-8-dead-what-is-status-of-over-30-tamil-people




