சேலம், சேலம் மாவட்டம் கரூப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியின் உரிமம் காலாவதி ஆகிவிட்டதாகவும், உள்ளூர் மக்களுக்கான சலுகைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கரூப்பூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓமலூர் தொகுதி வி.சி.க. மாவட்ட செயலாளர் சாம்ராய் குரு தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர், டோல்கேட் சுங்கச்சாவடியின் இருபுற சாலைகளிலும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-vck-members-stage-a-road-blockade-demanding-the-removal-of-the-karuppur-toll-plaza




