தாஷ்கண்ட், பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய 2 நாடுகளுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. 2 நாட்கள் சுற்றுப்பயணம் அதன்படி, பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். முதலில் அவர் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் நகருக்கு போய்ச் சேர்ந்தார். இது, அந்நாட்டுக்கு அவரது 4-வது பயணம் ஆகும். தாஷ்கண்ட் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கத் மிர்சியோயெவ் வரவேற்றார். உஸ்பெகிஸ்தானில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஷாவ்கத் மிர் சியோயெவ்வுடன் பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தினார். தஷ்கென்ட் வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் இணைப்பு, பாதுகாப்பு, எரி சக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தஷ்கென்ட் நகரில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கெட் மிர்ஸியோயேவை சந்தித்து இரு தரப்பு உறவு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், இந்தியாவிற்கு நீண்ட காலம் யுரேனியம் விநியோகம் செய்வது குறித்து ஒப்பந்தம் செய்ய உள்ளோம் எனத் தெரிவித்து உள்ளார். மேலும் பிரதமரின் இந்த பயணத்தில் 3 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்து ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நினைவுச்சின்னம், மகாத்மா காந்தி மையம் ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டார். உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது இந்தநிலையில், உஸ்பெகிஸ்தான் பயணத்தின் போது, பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ஒலிய தராஜலி தோ'ஸ்த்லிக்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கத் மிர்ஸியோயேவ் வழங்கினார். நட்புறவுக்கு கிடைத்த அங்கீகாரம் இந்த விருதை பெற்றுக் கொண்ட பின்னர் பிரதமர் மோடி கூறியதாவது: இந்த விருது, இந்தியாவின் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாரம்பரியத்துக்கும். இரு நாட்டு மக்கள் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் நட்புறவுக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். ``உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது கிடைத்தது பெருமை. ‘தோஸ்த்லிக்’ என்றால் நட்பு. இந்தியா, உஸ்பெகிஸ்தான் உறவின் அடிப்படையே நட்புதான்'' இந்த பயணத்தில் எனக்கும், எனது குழுவினருக்கும் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு உஸ்பெகிஸ்தான் அதிபருக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார். ``உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது கிடைத்தது பெருமை. ‘தோஸ்த்லிக்’ என்றால் நட்பு. இந்தியா, உஸ்பெகிஸ்தான் உறவின் அடிப்படையே நட்புதான்' என்றார். கிர்கிஸ்தான் உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்த பிறகு, பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிர்கிஸ்தான் செல்கி றார். அதிபர் சதிர்ஜாபரோவ் அழைப்பின்பேரில், இன்று 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட் டில் பங்கேற்க பிஷ்கெக் நகருக்கு செல்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/may-the-india-uzbekistan-friendship-flourish




