பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை நிலத்தில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப் பச்சனின் சொந்த ஊரான உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இந்த முதலீடுகளை செய்து வருகிறார். அயோத்தியில் ராமர் கோயில் 2024ம் ஆண்டு திறக்கப்படுவதற்கு முன்பு அங்கு அபிநந்தன் லோதா நிறுவனம் சராயு என்ற பெயரில் குடியிருப்பு வளாக திட்டத்தை உருவாக்கி வந்தது. அதில் அமிதாப் பச்சன் 15 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கி இருக்கிறார். அந்த நிலம் வாங்குவதற்காக அமிதாப் பச்சன் அதிகாலை 3 மணிக்கு அபிநந்தன் லோதாவிற்கு போன் செய்து பேசி நிலத்தை வாங்கி இருக்கிறார். இது தொடர்பான அனுபவத்தை அபிநந்தன் லோதா ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அவர் அதில் பேசுகையில்,''எனது போனுக்கு சில மிஸ்டு கால்கள் வந்திருந்தன. அதைத் தொடர்ந்து ஒரு மெசேஜ் வந்தது. அபிநந்தன் லோதா அதில், 'நான் அமிதாப் பச்சன் பேசுகிறேன், உங்களுக்கு வசதிப்படும்போது திரும்ப அழைக்கவும்' என்று இருந்தது. அதைப் பார்த்ததும் நான் பதற்றத்தில் அப்படியே நின்றுகொண்டே அவருக்குத் திரும்ப அழைத்தேன். நான் அழைத்தவுடன், அமிதாப் பச்சன் தான் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பிட்டு, புனித நகரான அயோத்தியில் தனக்கென ஒரு சொந்த நிலம் வாங்க விரும்புவதாகக் கூறினார். தி சரயு திட்டத்தின் விலை குறித்து விசாரித்தார். பின்னர் 15 ஆயிரம் சதுர அடி குறித்து கேட்டார். நான் 15,000 சதுர அடி நிலத்தின் விலையை ₹15 கோடி எனக் கூற, அமிதாப் பச்சன் எவ்வித பேரம் பேரமும் இன்றி, அடுத்த நாள் காலையிலேயே முழுத் தொகையையும் லோதாவின் நிறுவனத்திற்கு அனுப்பி அந்த டீலை உறுதி செய்தார்'' என்றார். அந்த நள்ளிரவு போன் காலில் தொடங்கிய அமிதாப் பச்சனின் அயோத்தி முதலீடுகள், இன்று மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், 'தி ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா' (HoABL) நிறுவனத்திடமிருந்து அயோத்தியில் ₹35 கோடி மதிப்பிலான 2.67 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இது அயோத்தி நகரில் அவர் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய தனிநபர் நில முதலீடாகும். அமிதாப் பச்சன் புதிதாக வாங்கியுள்ள 2.67 ஏக்கர் நிலம், 'தி ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா' (HoABL) நிறுவனத்தின் 75 ஏக்கர் பரப்பளவுள்ள பிரமாண்ட ஆடம்பர நகரத் திட்டமான 'தி சரயு' திட்டத்திற்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/trending/amitabh-bachchan-buys-land-worth-15-crore-in-ayodhya-after-making-inquiries-over-the-phone-at-3-am




