நடிகர் விஜய் சேதுபதி திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டதாக கூறியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பான் இந்திய அளவிலும் கவனம் பெற்று வருகிறார். இறுதியாக இவர் நடித்த மகாராஜா, தலைவன் தலைவி ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாகின. பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ‘டிரெயின்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவியுடன் நடித்து வருகிறார்.தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படமான ‘பாக்கெட் நாவல்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதியிடம் அதிக திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இனிமேல் சிறப்பு தோற்றங்களில் நடிக்கக் கூடாது என முடிவு செய்துவிட்டேன். ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்ததற்குக் காரணம் ரஜினி சார்தான். அவருடன் இணைந்து நடிக்கலாம் என ஆசைப்பட்டு ஒப்புக்கொண்டேன். மற்றபடி, இனி சிறப்பு தோற்றங்களில் நடிக்கப்போவதில்லை. காரணம், சில படங்களில் நான் சில நிமிடங்கள் நடித்தாலும் போஸ்டரில் புகைப்படம் போடுகிறார்கள். அது என் அடுத்தடுத்த திரைப்படங்களைப் பாதிக்கிறது. அதனால் இனிமேல் படங்களில் சிறப்பு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன்” என கூறியுள்ளார். இதன் மூலம் ‘ஜெயிலர் 2’ படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/this-is-the-reason-for-acting-in-the-movie-jailer-2-vijay-sethupathi




