புதுடெல்லி, டெல்லியில் 'நீட்' தேர்வு முறைகேடு மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடந்த விவகாரத்தில், பிரதமர் மோடி பதவி விலகக்கோரி அவரது வீடு அருகே ராகுல்காந்தி, பிரியங்கா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனையடுத்து ராகுல்காந்தியும், பிரியங்கா உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று பங்கேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் அனைவரும் கருப்பு நிற உடையில் வருகை தந்தனர். மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரியும், சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாகவும், ராகுல் காந்தி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. போராட்டத்தை புறக்கணித்துள்ளனர். மேலும், திமுக எம்.பி.க்கள் கருப்பு உடை அணியாமல் சாதாரண உடையிலேயே நாடாளுமன்றத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/opposition-parties-protest-in-parliament-complex-dmk-boycotts




