சென்னை, தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- அரசு சார்பாக நடத்தப்படும் திருமணப் புகைப்படம், காணொலித் தொகுப்பு பயிற்சிக்கு தற்பொழுது புதிதாக ரூ.8000 கட்டணம் வசூல் என பரவும் தவறான தகவல்! பரவும் செய்தி கடந்த முறை அரசு சார்பாக திருமணப் புகைப்படம், காணொலித் தொகுப்பு பயிற்சி இலவசமாக நடத்தப்பட்ட நிலையில், தற்பொழுது ரூ.8000 கட்டணமாக பெறப்படுகிறது என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. உண்மை என்ன? இது முற்றிலும் தவறான தகவல். இதற்கு முன்பு அதாவது, கடந்த 2026 மார்ச் மாதம் திருமணப் புகைப்படம், காணொலித் தொகுப்பு பயிற்சி நடத்தப்பட்டபோதே கட்டணமாக ரூ.8000 பெறப்பட்டது. தற்பொழுது நடைபெறும் பயிற்சிக்கு திடீரென கட்டணம் வசூலிப்பதாக பரவும் தகவல் தவறானதாகும். தவறான தகவலைப் பரப்பாதீர்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/information-circulating-that-a-fee-of-rs-8000-is-being-charged-for-a-video-conference-training-conducted-on-behalf-of-the-government-verification-agency-denies




