பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா பெலாமக்கி கிராமத் தைச் சேர்ந்த வாணிஸ்ரீ(வயது 22). இவர் சிவமொக்காவில் உள்ள ஒரு கல்லூரியில் தனது படிப்பை முடித்திருந்தார். இந்த நிலையில் அவர் கல்லூரியில் படித்த காலத்தில் வாணிஸ்ரீயும், அபிஷேக் என்ற மாணவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். இதில் வாணிஸ்ரீ தனது படிப்பை முடித்துவிட்டு பெங்க ளூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். மேலும் அபிஷேக், வாணிஸ்ரீயை காதலிப்பதாக கூறி அவருக்கு காதல் தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் வாணிஸ்ரீ அவரது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அபிஷேக், தன்னிடம் இருந்த வாணிஸ்ரீயின் தனிப்பட்ட புகைப்படங்களை அவருக்கு அனுப்பி, தான் அழைக்கும் போதெல்லாம் உல்லாசத்துக்கு வர வேண்டும் என்றும், அவ்வாறு வர மறுத்தால் அந்த புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைதளத்தில் வெளி யிட்டு நற்பெயரை கெடுத்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். ஏரியில் குதித்து தற்கொலை இருப்பினும் வாணிஸ்ரீ அவரது ஆசைக்கு இணங்க மறுத்துள்ளார். ஆனாலும் விடாமல் அபிஷேக், வாணிஸ்ரீயை காதலிக்கும்படி துன்புறுத்தியும், புகைப்படங்களை காட்டி மிரட்டியும் வந்துள்ளார். இதன்காரணமாக மனமுடைந்த வாணிஸ்ரீ கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீய ணைப்பு துறையினர் வாணிஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர். கடிதம் சிக்கியது மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வாணிஸ்ரீ தங்கியி ருந்த அறையை சோதனை செய்தனர். அப்போது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அபிஷேக் துன்புறுத்தியது குறித்தும், புகைப்படங்களை காட்டி மிரட்டியது குறித்தும் எழுதப்பட்டிருந்தது. மேலும் தனது குடும்பமானத்தை காப்பாற்றதான் தற்கொலை செய்து கொள்வதாகவும், அபிஷேக்கிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் தான் தனது குடும்பத்தை மிகவும் நேசிப்பதாகவும், அவர்களை தன்னால் மறக்க முடியாது என்றும் எழுதியிருந்தார். இதுகுறித்து அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்த போலீ சார், தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வரு கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/college-friend-invited-her-for-a-tryst-shocked-young-woman-takes-a-drastic-step




