சென்னை, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், அவரது கூட்டாளி ரமேஷ் கைது செய்யப்பட்டார். செந்தில்பாலாஜி முதல் குற்றவாளி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, புதிய வழக்கு ஒன்றை லஞ்சஒழிப்புபோலீசார் பதிவுசெய்துள்ளனர். இந்த வழக்கையொட்டி தமிழகம் முழுவதும் செந்தில்பாலாஜி தொடர்புடைய 45 இடங்களில், லஞ்சஒழிப்புபோலீசார் சோதனையும் மேற்கொண்டனர். இந்த புதிய வழக்கில், செந்தில்பாலாஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 2-வது குற்றவாளியாக டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர், ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் இருக்கிறார். 3-வது மற்றும்4-வது குற்றவாளிகளாக சீனியர் மண்டல மேலாளர்கள் ராமதுரைமுருகனும், பன்னீர்செல்வமும் இணைக்கப்பட்டுள்ளனர். 5-வது குற்றவாளியாக செந்தில்பாலாஜியின் தனிப்பட்டஉதவியாளர் பாஸ்கர் உள்ளார். இவர்களை தொடர்ந்து 6-வது மற்றும் 7-வதுகுற்றவாளிகளாக செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான ரத்தேஷ்ராஜ் சண்முகவேல் என்பவரும், கார்த்திக் என்ற மூலநூர் கார்த்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமீன் ரத்தேஷ் ராஜ் சண்முகவேலும், மூலநூர் கார்த்திக் என்பவரும்தான் 'கரூர் கேங்' என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜிக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளுடன், அவருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. முன்ஜாமீன் கிடைத்துவிட்டதால், இந்த வழக்கில் செந்தில்பாலாஜி விரைவில் லஞ்சஒழிப்பு போலீசில் விசாரணைக்கு ஆஜராவார். நெருங்கிய நண்பர்கள் கைது இந்த நிலையில் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக கூறப்படும், கரூரை சேர்ந்த கார்த்திக் என்பவரும், ரமேஷ் என்பரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களில் கார்த்திக்கின் பெயர்ஏற்கனவே போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், 7-வதாக இடம்பெற்றுள்ளது. கைதான ரமேஷ் என்பவர் புதிதாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக, லஞ்சஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-fraud-case-two-arrested




