கோவை, தென்மேற்கு பருவமழை மற்றும் எல் நினோ தொடர்பாக, கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- பல வருடங்கள் கழித்து கோவை மற்றும் கொங்கு மண்டலத்தில் எல் நினோ காரணமாக ஜூலை மாதத்தில் வெயில் மற்றும் வறண்ட காற்று பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த மாத இறுதிவரை இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. நாம் முன்பு கூறியிருந்தது போலவே தென்மேற்கு பருவமழை இந்த வருடம் அணைகளை நிரப்புவது சாத்தியமற்றது. இந்த வருடம் விவசாயம் செய்பவர்கள் அக்டோபர் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை எப்படி மழை பெய்கிறது என்று பொறுத்திருந்து பார்த்து அடுத்த பயிர் நடும் பணியை செய்யலாம். அதுவரை இருக்கும் பயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். பாலக்காடு கணுவாய் தென்னை விவசாயிகள் மிகுந்த கவனத்துடன் தங்களது தென்னை பயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இந்த வருடம் மற்றும் அடுத்த வருட வெயில் காலம் நமக்கு சோதனை காலம் தான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dams-not-filling-due-to-southwest-monsoon-coimbatore-weathermans-shocking-information




