மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரின் உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த 7-ம் தேதி மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. மாணவனின் மரணத்தை `கொலை வழக்காக' மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனக் கோரி `தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம்' சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. மதுரை பள்ளி மாணவன் இறப்பு விவகாரம் தற்போது மாணவன் தமிழ்செல்வனின் உடலை வாங்க குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமை பிணவறையில் இருந்து மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவரின் உடலைப் பெற்றுக் கொண்டாலும் அமைதியான முறையில் அவர் இறப்பிற்கான நீதி போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளனர். தமிழ்செல்வனின் உடல் அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு அவரது உடலை இறுதி அஞ்சலி செய்வதற்காக உறவினர்கள் எடுத்து சென்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/death-of-madurai-school-student-relatives-received-the-body-after-16-days




