ராமநாதபுரம், ரூ.4 கோடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.4 கோடி ராமநாதபுரம் அருகே உள்ள வாணிகிராமம் உசேனியா தெருவை சேர்ந்தவர் பக்ருதீன். இவருடைய மனைவி ஹாஜரா பானு. இவருக்கு சொந்தமாக வாணி கிராமத்தில் ஒரு நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.4 கோடி என கூறப்படுகிறது. இந்த நிலத்துக்கு ராமநாதபுரம் வெளிப்பட்டினம் தர்ப்பசயனம் ரோடு பகுதியை சேர்ந்த ஜாபர்அலி (வயது 58) என்பவர் போலியான பவர்பத்திரம் தயாரித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் அந்த நிலத்தின் ஒரு பகுதியை ராமேஸ்வரம் பேய்க்கரும்பு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது மகன்களான சந்திரகுமார் (47), செந்தில்குமார் (49) ஆகியோருக்கு தனித்தனியாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சந்திரகுமார் அந்த நிலத்தில் வீடு கட்டி உள்ளார். செந்தில்குமார் நிலத்தை சுற்றி வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் ஹாஜரா பானு தனது நிலத்தை மேற்கண்ட 3 பேரும் மோசடி ஆவணங்கள் மூலம் அபகரித்ததை அறிந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் ராமநாதபுரம் நிலமோசடி தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்தேவி வழக்குப்பதிவு செய்து ஜாபர்அலி, சந்திரகுமார், செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-4-crore-land-fraud-using-forged-documents-3-arrested-including-brothers




