சென்னை, சென்னை அண்ணாநகர், 6-வது அவென்யூ பகுதியில், மாநகராட்சியின் நிதியின் கீழ் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் போகன்வில்லா பூங்கா மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். பூங்காவில் 1,350-க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டுள்ளன. மேலும், நவீன திறந்தவெளி உடற்பயிற்சி மையம், தியானக் கூடம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பிரத்யேகப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. பூங்காவைத் திறந்து வைத்த பிறகு, அங்குள்ள விளையாட்டுப் பகுதி, செயற்கை நீரூற்று, மின்விளக்கு வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இதனைதொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறும்போது, த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விலை பேசியவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும். நாங்கள் குதிரை பேரம் நடத்த வேண்டிய தேவையே இல்லை. நாங்கள் ஆட்சி நடத்துவதற்கு தேவையான வலுவான கூட்டணி அமைந்து இருக்கிறது என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-have-absolutely-no-need-to-engage-in-horse-trading-minister-sengottaiyans-statement




