ஈரோடு, ஈரோடு - செங்கோட்டை இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சேலம் மற்றும் மதுரை ரெயில்வே கோட்டங்களில் தண்டவாளம் புதுப்பித்தல் மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த ரெயில் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில், நாளை, 08, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 09, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்துசெய்யப்படுகிறது. மேலும், வருகிற 10, 14, 18 ஆகிய தேதிகளில் செங்கோட்டை ரெயில் கரூருடன் நிறுத்தப்பட்டு, பின்னர் கரூரிலிருந்து ஈரோட்டிற்கு முன்பதிவற்ற சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-erodesengottai-rail-services




