வாஷிங்டன், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், நேற்று நடைபெற்ற பிரேசில் - நார்வே அணிகள் மோதின. இப்போட்டியில் நார்வே 2-1 என்ற கோல் கண்க்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. 4-வது முறையாக உலகக் கோப்பையில் ஆடும் நார்வே அணி காலிறுதியை எட்டுவது இதுவே முதல் முறையாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியை அந்த நாட்டினர் திருவிழா போல் வீதிகளில் கொண்டாடி மகிழ்ந்தனர். 96 ஆண்டு கால உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக முறை கோப்பையை உச் சிமுகர்ந்த அணி என்ற பெருமைக்குரிய பிரேசில் (5 முறை) காலிறுதிக்கு முன்பாகவே வெளியேறுவது கடந்த 36 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில், தோல்விக்கு பிறகு பிரேசில் அணியின் தலைமை பயிற்சியாளர் காரேலா அன்சேலோட்டி கூறுகையில், 'இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதற்கு நாங்கள் தகுதியானவர்கள் என்றே நினைக்கிறேன். நார்வே வீரர்கள் எத்தகைய பாணியில் ஆடக்கூடியவர்கள் என்பது தெரியும். பந்தை அதிக நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, ஆட்டத்தின் தீவிரத்தை தக்க வைக்க முயன்றனர். 70 நிமிடங்கள் வரை போட்டியில் நாங்கள் இருந்தோம். இறுதியில் ஹாலண்ட் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டார். இது மிகவும் ஏமாற்றம் அளிக்கும் முடிவு. அனைத்து வீரர்களும் வேதனையில் உள்ளனர். ஆனால் இது ஒரு சிறந்த அணி, வீரர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அவர்கள் கடினமாக உழைத்தார்கள். நாங்கள் தோல்வி அடைந்திருக்கக்கூடாது. என்றாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். ஒரு தோல்வி என்பது புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். நாம் தொடர்ந்து முன் னேற வேண்டும். புதிய யோசனைகளை கண்டறிய வேண்டும். இது ஒரு முடிவில்லை. அடுத்த உல கக் கோப்பைக்கு தயாராவதற்கான காலக்கட்டத்தின் தொடக்கம்' என்றார். 67 வயதான கார்லோ அன்சேலோட்டி ஒப்பந்த காலம் 2030-ம் ஆண்டு வரை இருப்பதால் அவர் தொடர்ந்து பிரேசில் அணியின் பயிற்சியாளராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/football/this-is-not-the-end-says-the-brazil-coach




