பர்மிங்காம், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.20 ஓவர் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.இதன்படி இந்தியா- இங்கிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி பர்மிங்காமில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஒருநாள் தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட். நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் அளித்த பதில்கள் வருமாறு, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 50 ஓவர் கிரிக்கெட்டுக்கு மாறுவது எனக்கு எளிதாக இருக்கும். எனது பலத்தை நம்பி வழக்கம்போல் அதிரடியாக ஆடுவேன்' என்றார். உலகத் தரம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெல்ல வேண்டும் என்பதே ஆசை. மேலும் விராட் கோலியுடன் ஒரே மைதானத்தில் விளையாடுவது எப்போதும் சிறப்பான அனுபவம். அவர் இந்த விளையாட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர்" என்றார். மேலும் அவர் கூறுகையில், 'இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் வென்றது எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. ஆனால் ஒருநாள் தொட ரில் இந்திய அணி முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, சுப்மன் கில் போன்ற முக்கிய வீரர்கள் திரும்பியுள்ளனர். எனவே இது கடினமான தொடராக இருக்கும்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/the-indian-team-will-be-completely-different-in-the-odi-series-england-player




