புதுடெல்லி 3 நாள் வேலை நிறுத்தம் தொடர்ச்சியாக, வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும். வங்கி ஊழியர்கள் நாளை முதல் 30-ந்தேதி வரை நாடு முழுவதும் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வாரத்துக்கு 5 நாள் வேலை, ஓய்வூதிய பயன்கள், காலிப்பணியிடங்களை நிரப்புதல், தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த வேலை நிறுத்தம் தொடர்ச்சியாக, வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. வங்கி பரிவர்த்தனை இதனால், வங்கி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையில், இன்று வங்கிகள் இயங்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதேபோன்று, வேலை நிறுத்தத்துக்கு முன்பு அத்தியாவசிய வங்கி பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்ளுமாறு வங்கிகளும் வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி உள்ளன. மேலும் பண தேவைகளுக்கு தங்கள் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் மற்றும் இன்டர்நெட் பேங்கிங், யு.பி.ஐ. உள்ளிட்டவற்றை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளன. வார இறுதி விடுமுறை இதற்கேற்ப, பல்வேறு பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை உஷார்படுத்தி குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றன. இதன்படி, வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும். வார இறுதி விடுமுறையை அடுத்து அறிவிக்கப்பட்டு உள்ள வேலைநிறுத்தம் எதிரொலியாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் நடவடிக்கையாக வங்கிகள் இன்று திறக்கப்பட்டு இருக்கும். மக்கள் அவற்றை பயன்படுத்தி பலன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/three-day-strike-banks-operating-normally-today




