சென்னை, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு 'இசட் பிளஸ்'பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தை இழந்தது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினும் தோல்வி அடைந்தார். அவருக்கு தொடர்ந்து 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தினமும் 55 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்கி வந்தனர். ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, முதல்-அமைச்சர் பதவி பறிபோனால் பாதுகாப்பு நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பு 'இசட்' பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்ப்பேட்டை செனடப் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு செல்லும் 4 நுழைவுவாயில்களில் 20 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது 2 நுழைவுவாயில்களில் மட்டும் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வசிக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடைமுறை குறித்து உளவுப்பிரிவு போலீசார் அறிக்கை அடிப்படையில் தமிழக அரசு முடிவு எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் த.வெ.க. அரசை கண்டித்து தி.மு.க.வினர் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-security-reduced-for-mk-stalin-dmk-members-condemn




