ஐதராபாத், தீ விபத்தில் ஏற்கனவே 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 குழந்தைகள் இன்று (புதன்கிழமை) உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. குழந்தைகள் பிரிவில் தீ தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் நகரில் ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம் (ரிம்ஸ்) அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. அங்குள்ள சிறப்பு பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் (எஸ்.என்.சி.யு.) குறைப் பிரசவம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்காக 27 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணிக்கு மேல் அந்தப் பிரிவில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் அறை முழுவதும் புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகளை மீட்கும் பணியில் மருத்துவமனை ஊழியர்களும், பெற்றோர்களும் ஈடுபட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கதவுகள், கண்ணாடிகளை உடைத்து குழந்தைகள் வெளியே கொண்டு வரப்பட்டனர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 3 குழந்தைகள் சாவு சில குழந்தைகள் உடல் கருகிய காயங்களுடனும், பல குழந்தைகள் புகையால் பாதிக்கப்பட்ட நிலையிலும் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் மூலம் பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஒரு குழந்தை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற வழியிலேயே இறந்தது. மேலும் 2 குழந்தைகள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள குழந்தைகளில் 20 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் உடல்நிலை சீரான 4 குழந்தைகள் பெற்றோருடன் வீடு திரும்பினர். காரணம் என்ன? ஏ.சி. எந்திரம் பழுதடைந்ததால் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும், தீ விபத்துக்கான உண்மையான காரணம் விசாரணை மற்றும் ஆயுவுகளுக்குப் பிறகே தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர். பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு தீ விபத்தில் ஏற்கனவே 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 குழந்தைகள் இன்று (புதன்கிழமை) உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. புகையைச் சுவாசித்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில குழந்தைகள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். பாதுகாப்பு ஆய்வுக்கு உத்தரவு தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையைப் பார்வையிட்ட மாநில சுகாதாரத் துறை மந்திரி சி. தாமோதர் ராஜநரசிம்மா, தீ விபத்துக்கான காரணம், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து நிபுணர் குழு விரிவான விசாரணை நடத்தும் என்றும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அது பரிந்துரைக்கும் என்றும் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/fire-at-telangana-government-hospital-death-toll-rises-to-5




