மதுரை, மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக மங்களூருவுக்கு வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக இந்த ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. அதாவது, ராமேசுவரம்-மங்களூரு வாராந்திர ரெயிலில் (வ.எண்.16621/16622) வருகிற 3-ந் தேதி முதல் 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, இந்த ரெயிலில், 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 8 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிக்கான பெட்டி ஆகியன இணைக்கப்பட்டிருக்கும். அதேபோல, ராமேசுவரம்-தாம்பரம் வாராந்திர ரெயிலில் (வ.எண்.16103/16104) வருகிற 1-ந் தேதி முதல் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி மற்றும் ஒரு 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயிலில் 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 6 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி கள், 4 பொதுப்பெட்டிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கான பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/addition-of-extra-coaches-to-the-rameswaram-train




