சென்னை, கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதிபதி கே.என்.பாஷா குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு குழுவின் பரிந்துரைகளை விரைந்து பெற்று ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்பு தனிச் சட்டம் இயற்றப்படும் என அமைச்சர் வன்னி அரசு அறிவித்துள்ளார். ஆணவக்கொலைக்கு சிறப்பு சட்டம் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் வன்னி அரசு., வன்கொடுமைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், சமத்துவம் மற்றும் சமூகநீதியை நிலைநாட்டி, அனைவரிடையேயும் இணக்கமான சூழலை உருவாக்க அரசு முயன்றுவருகிறது. இருப்பினும் தங்கள் சொந்தப் பிள்ளைகளையே ஆணவக்கொலை செய்யும் சம்பவல்கள் சமூகத்தில் அரங்கேறி வருகின்றன. பாஷா குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் ஆணவப்படுகொலை சம்பவங்களை தடுப்பதற்கு, சிறப்பு சட்டம் இயற்றுவதற்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அரசு அலுவலர்களுடனும் கலந்து ஆலோசித்து கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளது. மேலும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து கருத்துகளைப் பெற்று அறிக்கை தயார் செய்யவேண்டிய நிலை உள்ளதால், பாஷா குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்ட உடன், ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என்று திறந்த மனதோடு அறிவிக்கிறேன்." என தெரிவித்தார். தவெக ஆட்சியில் 10 ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாக திமுக குற்றஞ்சாட்டிய நிலையில் அமைச்சர் வன்னி அரசு அறிவித்துள்ளார். முதல்-அமைச்சரிடம் வாழ்த்து இதனிடையே, சமூக நீதித்துறையின் 2026-2027ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மற்றும் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் சட்ட பேரவையில் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் வன்னிஅரசு. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-law-to-be-enacted-against-honor-killings-vanni-government




