மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்துக்குச் சென்றார். பின்னர், ரயில் மூலம் கேரளாவுக்குச் செல்ல திட்டமிட்ட அவர், சென்னை சென்ட்ரலுக்கு வந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓய்வெடுத்த அந்தப் பெண், இரண்டாம் வகுப்பு பெண்கள் காத்திருப்போர் அறையில் உள்ள குளியலறையை பயன்படுத்த சென்றார். அப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக அந்த அறை மூடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ரயில் நிலைய வளாகத்தில் உள்ள இன்னொரு பயணிகள் காத்திருப்போர் அறைக்குச் சென்றார் அந்தப் பெண். அங்கிருந்த குளியல் அறையில் அவர், குளித்திருக்கிறார். அப்போது அருகில் உள்ள இன்னொரு குளியலறையிலிருந்து யாரோ ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுப்பதை அந்தப் பெண் கவனித்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த அவர், கூச்சலிட்டிருக்கிறார். கைது உடனே காத்திருப்போர் அறையிலிருந்தவர்கள், என்னவென்று அந்தப் பெண்ணிடம் விசாரித்திருக்கிறார்கள். உடனே அவர், வீடியோ எடுத்த தகவலை தெரிவித்திருக்கிறார். இதையடுத்து வீடியோ எடுத்தவரை சுற்றி வளைத்துப் பிடித்த பொதுமக்கள் அவரின் செல்போனை ஆய்வு செய்திருக்கிறார்கள். பின்னர், அந்த நபரையும் செல்போனையும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அவரிடம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்த நபரின் பெயர் அருண் என்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இவர், தி.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். விசாரணைக்குப்பிறகு அருண் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/eb-employee-arrested-in-woman-harssment-case




