ஐதராபாத், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மியாப்பூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பெண்டேஷ் (வயது 45). இவருக்கு சொந்தமாக மியாப்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்டேஷ் தன் முதல் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். மதுசூதன் ரெட்டி இதற்கிடையே, கடந்த 2014-ஆம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்த சத்தியவதி (40) என்ற பெண்ணுடன் பெண்டேஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெண்டேஷும் சத்தியவதியும் கடந்த சில ஆண்டுகளாக மியாப்பூர் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், நிஜாமாபாத்தை சேர்ந்த மதுசூதன் ரெட்டி (38) என்பவர் பெண்டேஷ் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வந்தார். கள்ளத்தொடர்பு அப்போது சத்தியவதிக்கு அந்த வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்களது கள்ளக்காதலுக்கு பெண்டேஷ் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி இரவு, சத்தியவதி கணவருக்கு தூக்க மாத்திரை கலந்த உணவை கொடுத்தார். அதனை சாப்பிட்ட பெண்டேஷ் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். அப்போது கள்ளக்காதலனை அழைத்த சத்தியவதி, இருவரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி பெண்டேஷைக் கொலை செய்தனர். பெட்ரோல் ஊற்றி எரித்தனர் பின்னர் சடலத்தை காரில் எடுத்துக்கொண்டு சென்று, மராட்டிய மாநிலம் துல்ஜாபூரிலுள்ள பாழடைந்த கட்டிடத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்தனர். பாதி எரிந்த நிலையில் உடல் இருந்ததால், அதனைப் புதைத்துவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் வீட்டிற்கு வந்த சத்தியவதி, தன் கணவரை காணவில்லை என மியாப்பூர் போலீசில் புகார் செய்தார். உறவினர்களின் சந்தேகம் பெண்டேஷ் காணாமல் போனதாக சத்யவதி நாடகமாடி வந்தாலும், அவரது முகத்தில் எந்தவொரு சோகமும் இல்லை. அவர் மதுசூதன் ரெட்டியுடன் பல இடங்களுக்கு சென்று வந்ததை கவனித்த பெண்டேஷின் உறவினர்கள், மியாப்பூர் காவல் நிலையத்தில் சத்யவதி மீது நேரடியாகப் புகார் அளித்தனர். கைது போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கணவரைக்கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டனர். போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண்டேஷ் கொலை செய்யப்பட்ட 8 மாதங்களுக்கு பிறகு அவரது மனைவியும் கள்ளக்காதலனும் சிறையில் அடைக்கப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/telangana-woman-who-killed-and-buried-her-husband-then-roamed-around-with-her-lover-caught-after-8-months




