சென்னை, தலைமை செயலக வளாகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “பாஜக உடன் திமுக தற்போது நேரடிக் கூட்டணி வைத்துள்ளது. அரசியலில் நிரந்தர எதிரி இல்லை என கனிமொழி சோமு, வானதி சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி சிவா மத்திய மந்திரி ஆவார் என கூறப்பட்டதை திமுக தரப்பில் இருந்து யாரும் மறுக்கவில்லை. டெல்லியில் யாருடன் பேசினாலும் மக்கள் நலனுக்காக இருக்கும் என மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். தொகுதி மறுவரையறைக்கு எதிராக வாக்களிப்போம் என திமுக ஒரு வார்த்தை கூறவில்லை. பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி வைத்திருப்பது இதன் மூலம் தற்போது நிரூபணமாகியுள்ளது. இருக்கை மாற்றத்துக்காக தேநீர் விருந்தில் கலந்துகொண்டேன் என கனிமொழி கூறுவது நம்பும்படி இல்லை. காவிரியில் நீர் திறப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. காவிரி உரிமையை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஊடகங்களை அழைக்காததற்கு இடப்பற்றாக்குறையே காரணம். சுதந்திர தினத்தை ஒட்டி கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்துகொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ” இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-in-direct-alliance-with-bjp-minister-nirmal-kumars-statement




