நியூஜெர்சி உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசிலை வீழ்த்தி நார்வே அணி காலிறுதிக்கு முன்னேறியது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் நடத்தப்பட்டு வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று போட்டிகள் (நாக்-அவுட் சுற்றுகள்) முடிந்து, 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு தகுதி பெறும். எர்லிங் ஹாலந்து அபாரம் அந்த வகையில், அதிகாலை 1.30 மணிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நியூஜெர்சி மைதானத்தில் நடந்த 3-வது சுற்று போட்டி ஒன்றில் பிரேசில் மற்றும் நார்வே அணிகள் விளையாடின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், 79-வது நிமிடத்தில் நார்வேவின் எர்லிங் ஹாலந்து முதல் கோலை போட்டார். தொடர்ந்து போட்டி முடியும் நேரத்தில் (90-வது நிமிடத்தில்) மற்றொரு கோலை போட்டார். இதனால், 2-0 என்ற கணக்கில் நார்வே அணி முன்னிலை பெற்றது. கூடுதல் நேரத்தில் கோல் கூடுதல் நேரத்தில் பிரேசில் அணிக்கான முதல் கோலை நெய்மர் போட்டார். 2-1 என பிரேசில் அணி 2-ம் இடத்தில் இருந்தது. அதன்பின்னர் கோல் அடிக்கப்படவில்லை. இதனால், நார்வே அணி வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது. ஒரே ஒரு முறை பிரேசில் அணிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/football/world-cup-football-norway-beats-brazil-to-advance-to-quarterfinals




