சென்னை, முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தீரன் சின்னமலை நினைவு நாள் ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன். தியாக உணர்வு கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது. சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! இவ்வாறு அதில் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-pay-tribute-to-the-bravery-and-sacrifice-of-theeran-chinnamalai-chief-minister-vijay




