தேனி புதிய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு மற்றும் தண்ணீர் வசதியின்றி பொதுக்கழிப்பிடங்கள் காணப்படுகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் முக்கியமான பேருந்து நிலையமாக தேனி புதிய பேருந்து நிலையம், முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையம் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றது. இந்த பேருந்து நிலையமானது மாவட்டத்தின் மையப்பகுதியாக உள்ளது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமன்றி, தேனி மாவட்டமானது கேரள மாநில எல்லைப் பகுதியாகவும், இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் நிறைந்த பகுதியாகவும் இருப்பதால் அதிகமான பயணிகள் வருகை புரியும் பேருந்து நிலையமாக இது உள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் புறநகர் செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடத்திலும், நகர் பேருந்துகள் நிறுத்துமிடத்திலும் பயணிகள் பயன்பாட்டிற்காக தனித்தனியே இரண்டு பொதுக் கழிவறைகள் உள்ளன. இந்தப் பொதுக் கழிவறைகளில் முறையான தண்ணீர் வசதியின்றியும் சுகாதாரமின்றியும் காணப்படுவதால், கழிவறைகளைப் பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். கழிப்பறைகள் நீண்ட நாள்களாக முறையாகச் சுத்தம் செய்யப்படாததாலும், கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் தூய்மையின்றி இருப்பதாலும் ஒரு சில பயணிகள் அருகில் உள்ள திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தின் பல பகுதிகளிலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அருகில் உள்ள கடைக்காரர்கள் உள்ளிட்டோர் அசௌகரியத்தை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் என அனைவருக்கும் கழிவறை வசதியானது இன்றியமையாத ஒன்றாகும். மேலும் கழிவறை தூய்மை மட்டுமன்றி திறந்தவெளியிலும் இவ்வாறாக தூய்மையின்றி துர்நாற்றத்துடன் காணப்படுவதால், நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் பயணிகளின் சுகாதார வசதி மற்றும் நோய் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், இப்பிரச்னையை முதன்மையானதாகக் கருத்தில் கொண்டு முறையான தண்ணீர் வசதி, தூய்மைப் பணிகளை மேற்கொண்டு கழிவறைகளைப் பராமரிக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/theni-poor-hygiene-in-public-toilets-raises-risk-of-disease-outbreaks




