காசா சிட்டி, காசாவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர். பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என இரு பகுதிகளாக உள்ளது. இதில் மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசு நிர்வகித்து வருகிறது. காசா முனையை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நிர்வகித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த 2023ம் ஆண்டு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் மீது போர் தொடுத்த இஸ்ரேல், காசா முனை மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அமைதி ஒப்பந்தம் மூலம் போர் முடிவுக்கு வந்துள்ளது. போரின்போது காசாவின் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில் பல கட்டிடங்கள் கடுமையான சேதமடைந்துள்ளன. அந்த சேதமடைந்த கட்டிடங்களிலும் மக்கள் வசித்து வருகின்றனர். கட்டிட விபத்து - 20 பேர் பலி இந்நிலையில், காசா முனையில் உள்ள காசா சிட்டியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இருந்தது. இந்த கட்டிடம் இஸ்ரேல், ஹமாஸ் போரில் கடுமையாக சேதமடைந்தது. ஆனாலும், அந்த கட்டிடத்தில் மக்கள் வசித்து வந்தனர். இந்த அடுக்குமாடி கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 20 பேர் உயிரிழந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/gaza-building-collapse-kills-20-traps-dozens-under-rubble




