பார்படோஸ், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தி பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அபார வெற்றிபெற்றது. கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன ஜமைக்கா கிங்ஸ்மென் - பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 34வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா கிங்ஸ்மென், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பார்படோஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் மஸ் சடகட் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய பார்படோஸ் வீரர் ஜகீம் போலார்டு அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பார்படோஸ் வெற்றி இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பார்படோஸ் 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய பார்படோஸ் வீரர் சட்ரெக் டெஸ்கார்டி அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த அணியின் குடகேஷ் மொடி அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த வெற்றியின் மூலம் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுக்குள் பார்படோஸ் நுழைந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-barbados-stun-jamaica-for-thrilling-win




