சென்னை 6 ஆயிரம் கிலோ போதைப்பொருள் வழக்கு தொடர்பாக சென்னை, மதுரையில் 13 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது. போதைப்பொருள் 2024-ம் ஆண்டு நவம்பரில் அந்தமான் தீவுகள் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில், மியான்மர் படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படை தடுத்து நிறுத்தி சோதனையிட்டது. இதில், 6 ஆயிரம் கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.36 ஆயிரம் கோடியாகும். இதுதொடர்பாக படகில் இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் என்.ஐ.ஏ. இன்று சோதனையில் ஈடுபட்டது. ஆவணங்கள் பறிமுதல் இதற்காக சென்னை, மதுரையில் 13 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.71 லட்சம் ரொக்கம், 53 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர், 1 லட்சத்து 50 ஆயிரம் மியான்மர் கியாட், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றுடன் டிஜிட்டல் கருவிகள், முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ. கைப்பற்றியது. அதில், டிஜிட்டல் கருவிகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/6000-kg-drug-case-nia-raids-13-locations-in-chennai-madurai




