சென்னை, ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான பாலியல் வழக்கு நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் வீரமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கை காவல்துறை அதிகாரிகள் முடித்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முந்தைய திமுக அரசு இந்த வழக்கை சரியாக கையாளவில்லை, இவ்வளவு பெரிய கொடூர குற்றத்தில் இருந்து வீரமணியை தப்பிக்க வைத்தது யார்? என்று ஆளும் தவெகவும் கேள்வி எழுப்பி வருகிறது. இந்த நிலையில், இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது; திமுகவின் நிலை திமுக ஆட்சி காலத்தில் புகார் அளிக்கப்படுகிறது. முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. எப்.ஐ.ஆர். பதிவு செய்த பிறகு ஏன் மேல் விசாரணை நடத்தப்படவில்லை. அந்த வீடியோ தெளிவாக இல்லை என்று ஒற்றை காரணத்தை சொல்லி இவ்வளவு பெரிய வழக்கை முடித்து வைக்க முடியுமா? என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். அப்படியென்றால் அதற்கான அரசியல் அழுத்தத்தை கொடுத்தது யார்? அதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் யார் என்பதற்கு மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் எந்த பதிலும் இல்லை. குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் திமுகவின் நிலை என்று இப்போது தெரிவிக்கிறார். ஆட்சியில் இருந்த காலத்தில் 2024 ஆம் ஆண்டே இந்த புகார் எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி பிரமுகர் தற்போது அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். 2025 ஆம் ஆண்டு இந்த வழக்கை முடிப்பதற்கு திமுக ஆட்சி காலத்தில் முயற்சி எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டுமே திமுக ஆட்சி காலத்தில்தான். எனவே, இந்த விஷயத்தை மு.க. ஸ்டாலின், அவர் அறிக்கை விட்டு இருப்பதை போல கடந்து சென்றுவிட முடியாது. கடந்து போக முடியாது தன்னுடைய ஆட்சி காலத்தில் இவ்வளவு பெரிய வலைப்பின்னல் போல பாலியல் குற்றம் நடந்து இருக்கிற போது, உரிய விசாரணை நடத்தாததற்கு நான் பொறுப்பேற்கிறேன். அதிகாரிகள் இந்த பிரச்சினையை உரிய முறையில் எனது கவனத்திற்கு கொண்டு வரவில்லை என்ற முறையில்தான் அவர் பதில் சொல்வது நேர்மையாக இருக்குமே தவிர, இதில் எங்களுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை என்று கடந்து போவதனால் இந்த பிரச்சினையை கடந்து போக முடியாது. அதிமுக, திமுக ஆட்சி காலத்தில் இருந்த அதிகாரிகள் கூட்டாக இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்று இருக்கிறார்கள். அரசு காரணம் அல்ல பல கோடிக்கணக்கான ரூபாய் கை மாறப்பட்டு இருக்கிறது என்று செய்திகள் வருகின்றன. இந்த விவகாரத்தில் எஸ்.ஐ.டி. சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும். உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெற வேண்டும். காலவரையறையுடன் இதுபோன்ற வழக்குகளில் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதற்கும், தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கும் நீதிபதியின் உத்தரவுதான் காரணமே தவிர.அரசு காரணம் அல்ல” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/gem-veeramani-case-who-exerted-pressure-during-the-dmk-regime-cpms-shanmugam-fires-a-barrage-of-questions




