செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியில் சிறுவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களிடையே டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட சிறுவர்கள் கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் காய்ச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chengalpattu-rise-in-dengue-fever-cases-among-children-public-concerned




