திருப்பதி, புதிய உச்சம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. பக்தர்களின் வருகைக்கு ஏற்ப லட்டு விற்பனையும் நடந்து வருகிறது. அதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் லட்டு உற்பத்தியை கணிசமாக உயர்த்தி, எந்தவித பற்றாக்குறையும் ஏற்படாமல் தடையின்றி வினியோகம் செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 1 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரத்து 170 லட்டுகள் விற்பனையாகி இருந்தன. இது மே மாதத்தில், 1 கோடியே 21 லட்சத்து 35 ஆயிரத்து 528 லட்டுகளாக உயர்ந்தன. தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த மாதம் (ஜூன்) 1 கோடியே 26 லட் சத்து 81 ஆயிரத்து 805 லட்டுகள் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுடன் ஒப்பிடு கையில், ஜூன் மாதத்தில் லட்டு விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 23.55 சதவீதம் உயர்வு ஒப்பீட்டளவில், கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 1 கோடியே 2 லட்சத்து 64 ஆயிரதது 364 லட்டுகளும், கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1 கோடியே 19 லட்சத்து 21 ஆயி ரத்து 353 லட்டுகளும் விற்பனையாகியிருந்தன. இதன் மூலம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட இந்த ஆண்டு ஜூன் மாதம் 7 லட்சத்து 59 ஆயிரத்து 452 லட்டுகள் கூடுதலாக விற்பனையாகி 6.37 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. அதேபோல், 2024 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 24 லட் சத்து 17 ஆயிரத்து 441 லட்டுகள் அதிகமாக விற்பனையாகி 23.55 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி புனிதமான ஸ்ரீவாரி லட்டு பிரசாதத்தை பெற்றுச் செல்லும் வகையில், தேவைக்கேற்ப லட்டு உற்பத்தி மற்றும் வினியோகம் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/laddu-sales-at-tirupati-ezhumalaiyan-temple-reach-new-high-do-you-know-how-much




