திருச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, `` நீட் தேர்வைச் ரத்து செய்யக் கோரியும் நாடு முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திரண்டு போராடி வருகிறார்கள். இதில் எந்தவித கட்சி அடையாளமும் இல்லாமல் தவெக இளைஞர்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், தி.மு.க அரசு இதிலும் தலையிட்டு, 200, 300 ரூபாய் கொடுத்து சிலரை அழைத்து வந்து, 'ஜென்-ஜி தி.மு.க' (Gen-Z DMK) என்ற டி-ஷர்ட்டை அணிய வைத்துப் போராட்டத்தைத் திசைதிருப்பவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் முயல்கிறது. ஸ்டாலின் - திமுக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ‘ஜென்-ஜி’ என்றால் என்னவென்றே புரியவில்லை. அவருக்கு யாரோ தவறான ஆலோசகர்கள் வழிகாட்டுகிறார்கள். தேர்தல் நேரத்தில் 'பெண் டீம்' அமைத்து அவரைத் தவறாக வழிநடத்தியது போல, இப்போதும் அவரிடம் தவறான புரிதலை உருவாக்கியுள்ளனர். உதயநிதி இதுபோன்ற கோமாளித்தனமான வேலைகளை விட்டுவிட்டு, தனது தகுதியைப் பற்றி சுயபரிசோதனை செய்ய வேண்டும். தி.மு.க-வின் தற்போதைய தலைவர் 'திராவிட மாடல்' என்று கூறிச் தன் தலைமையில் ஆட்சி நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் சென்றுவிட்டார். உதயநிதிக்கும் அதே குழப்பம்தான் நீடிக்கிறது. கட்சி நிர்வாகிகளை அழைத்து, அண்ணா உருவாக்கிய தி.மு.க-வை வழிநடத்த உதயநிதிக்குத் தகுதி இருக்கிறா அல்லது கனிமொழிக்குத் தகுதி இருக்கிறா என்பது குறித்து உட்கட்சி வாக்கெடுப்பு நடத்திப் பார்க்க வேண்டும். அதன் முடிவையாவது அவர் பார்த்துத் தன் தகுதியை உணர்ந்து கொள்ள வேண்டும். புதிய அரசுப் பேருந்துகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நிறங்கள் பயன்படுத்தப்படுவதாக எழும் சர்ச்சைகளுக்கு அடிப்படையே இல்லை. உதயநிதி, கனிமொழி கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க பேருந்துகளிலோ, பேனர்களிலோ விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் த.வெ.க-விற்கு கிடையாது. தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை அறிவித்த ஒரு நொடியிலேயே அது உலகளவில் மக்களிடம் போய் சேர்ந்துவிட்டது. இதுபோன்று விளம்பரம் தேடும் மலிவான அரசியலை தவெக தலைவர் என்றுமே அனுமதிக்க மாட்டார். நீண்ட காலமாகச் சிறையில் இருக்கும் இஸ்லாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்யத் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் 'ஆர்ட்ஸ் ஆக்ட்' (Arms Act) பிரிவின் கீழ் வருவதால் ஒன்றிய அரசின் சில சட்ட நெறிமுறைகள் உள்ளன. விரைவில் இதற்கான நல்ல முடிவு எட்டப்படும்" என்றார். "இது சினிமா கிடையாது; Scene பண்ணுவதற்கு"- தவெக அரசை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/minister-nirmal-kumar-met-with-reporters-in-trichy



