டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய நடிகை ஆண்ட்ரியா, ``இதான் என் முதல் போராட்டம். கடந்த ஒரு வாரமாக நான் அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருக்கிறேன். ban neet protest - Neelam மாணவர்கள் போராட்டம் எங்கோ ஒரு இடத்தில் நடக்கிறது என்றாலும் நாம் இங்கு உணர்வுப்பூர்வமாக மிகவும் ஒன்றிப்போயிருக்கிறோம். எனக்கு மிகவும் பிடித்த ரவீந்திரநாத் தாகூரின் கவிதையிலிருந்து சில வரிகளை மட்டும் இங்குப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். `எங்கு மனது அச்சமின்றி இருக்கிறதோ, எங்கு தலை நிமிர்ந்து நிற்கிறதோ, எங்கு அறிவு அனைவருக்கும் விலையின்றிச் சுதந்திரமாகக் கிடைக்கிறதோ. அந்தச் சுதந்திர சுவர்க்கத்தில், என் தந்தையே, என் தேசம் விழித்தெழட்டும்' - அறிவு அனைவருக்கும் விலையின்றி கிடைக்கவேண்டும். அறிவு என்பது நமது பிறப்புரிமை. அதைத் தான் இந்த வரிகள் உணர்த்துகின்றன. நமது மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அந்த அறிவை இந்த நீட் அமைப்பு மறுக்குமேயானால், அந்த அமைப்பை நாம் திருத்தியாக வேண்டும். நான் இங்கு நீண்ட உரை நிகழ்த்தத் தயாராக வரவில்லை, எனவே என்னை இங்கு அழைத்ததற்கு மிக்க நன்றி. ஆனால், நான் எப்போதும் மாணவர்களின் பக்கமே உறுதியாய் நிற்பேன். மனதின் சுதந்திரமே ஒரு மனிதனின் உண்மையான வாழ்வியலுக்கான சான்று." என உரையாற்றினார். Ban NEET போராட்டம்: ``நம்மை மீண்டும் கைகட்டி நிற்க வைக்கும் முயற்சி" - இயக்குநர் வெற்றிமாறன் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/andrea-addressed-the-anti-neet-protest



