லக்கிசராய் பீகாரில் சிவன் கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தில் அசோக் தம் கோவிலில் 3-வது திங்கட்கிழமையை முன்னிட்டு சிவ தரிசனத்திற்காக மக்கள் திரண்டு வருகை தந்திருந்தனர். அப்போது, மின்சார ஒயர் ஒன்று திடீரென அறுந்து விழுந்தது. இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மக்கள் நாலாபுறமும் அலறி ஓடினர். இதில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 7 பேர் பலியானார்கள். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் ஹேமலதா தேவி, லலிதா தேவி, ரிங்கு தேவி மற்றும் மன்மலா தேவி என 4 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மற்ற 3 பேரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/bihar-temple-stampede-7-killed




