சென்னை, 2021 ஜன.01 முதல் 2025 அக்.31ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகள் மூலம் ரூ.54 கோடியே 91 லட்சத்து 56 ஆயிரத்து 915 தேர்வுக் கட்டணமாக பெறப்பட்டுள்ளது. 2020-21 முதல் 2025-26 வரையிலான 6 நிதியாண்டுகளில், தேர்வாணையத்தின் தேர்வுகள் தொடர்பான செலவினங்களை மேற்கொள்ள ரூ.319 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் பணி நியமனம் பெற்ற தேர்வர்கள், ஆண், பெண், திருநங்கைகள் எண்ணிக்கை மற்றும் போலி சான்றிதழ் சமர்ப்பித்துச் சிக்கியவர்கள் பற்றிய விவரங்கள் தனியாகத் தொகுத்து பராமரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை தேர்வுக் கட்டணமாக எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது, தேர்வுகளை நடத்துவதற்காக எவ்வளவு நிதி பெறப்பட்டு செலவிடப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பதில் அளித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tnpsc-exam-revenue-5491-crore-expenditure-31950-crore




