புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா, உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 1,575 ரன்கள் ரோகித் சர்மா இதுவரை 2015, 2019 மற்றும் 2023-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். மொத்தம் 28 போட்டிகளில் 60.57 என்ற சராசரியுடன் 1,575 ரன்கள் குவித்துள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்டர்களின் பட்டியலில் ரோகித் சர்மா தற்போது 4-வது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் (2,278 ரன்கள்), விராட் கோலி (1,795 ரன்கள்), ரிக்கி பாண்டிங் (1,743 ரன்கள்) ஆகியோர் அவருக்கு முன்னிலையில் உள்ளனர். 7 சதங்கள் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனை ரோகித் சர்மா வசம் உள்ளது. உலகக் கோப்பை தொடர்களில் 7 சதங்கள் அடித்த ஒரே பேட்டர் ரோகித் சர்மாதான். இதில் 2019 உலகக் கோப்பை தொடரில் மட்டும் 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்தார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 6 சதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர். சிக்சர் சிக்சர்கள் விளாசியதிலும் ரோகித் சர்மா உலகக் கோப்பையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனை அவரிடம் உள்ளது. இதுவரை 54 சிக்சர்களை விளாசியுள்ள ரோகித் சர்மா, 50-க்கும் மேற்பட்ட சிக்சர்களை அடித்த ஒரே வீரராகவும் திகழ்கிறார். வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் 49 சிக்சர்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். இவ்வாறு ஒருநாள் உலகக் கோப்பையின் ’கிங்’-காக ரோகித் வலம் வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/rohit-sharma-rohit-is-the-real-king-of-the-odi-world-cup-no-one-even-comes-close-to-the-hit-man-in-those-records




