மும்பை கத்திக்குத்து காயத்துடன் 174 இஸ்ரேலிய பயணிகளின் உயிரை காப்பாற்ற போராடிய இந்திய விமானியின் பரபரப்பு பேட்டி வெளியாகி உள்ளது. துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புறப்பட்ட எப்.இசட்.1073 என்ற எண் கொண்ட பிளைதுபாய் விமானம் சென்றபோது நடுவானில் விமானிகள் இடையே கடும் சண்டை நடந்தது. கத்திக்குத்து காயம்பட்ட போதிலும் கேப்டனாக இருந்த இந்திய விமானி சாதுர்யத்துடன் செயல்பட்டார். இதனால், விமானத்தை தகர்க்கும் சதி முறியடிக்கப்பட்டது. 174 பயணிகள் உயிர்தப்பினர். அந்த விமானத்தின் கேப்டனாக பணியாற்றியவர் ஸ்மித் மச்சார். இந்திய நாட்டை சேர்ந்தவரான அவர், மும்பை நகரின் கத்கோபர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஆவார். துபாயில் வேலைக்காக வசித்து வந்துள்ளார். அவர் தன்னுடைய விமானி ஆவதற்கான கனவு, பயணம் உள்ளிட்டவற்றை பற்றி முன்பொரு பேட்டியில் ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டார். குடும்ப தொழில் அவர் கூறும்போது, விமான துறையில் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய சிறு வயது கனவு அல்ல. குடும்ப தொழிலான ஆடை வர்த்தகத்திலேயே வருங்காலத்தில் ஈடுபடுவேன் என நினைத்து கொண்டிருந்தேன் என கூறியுள்ளார். இதற்காக பள்ளி படிப்பு முடித்ததும், டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் படிப்பில் மச்சார் சேர்ந்துள்ளார். தாயார் அச்சம் அதனை முடித்து பட்டம் பெற்ற பின்னர் மேலாண்மை படிப்பு ஒன்றை படித்து கொண்டிருந்தபோதே விமானியாகலாம் என நினைத்திருக்கிறார். அவர் விமானியாக பணியாற்ற விரும்பியபோது, அவருக்கு வயது 19. ஆனால், அவருடைய தாயார் இதனை விரும்பவில்லை. அவருடைய பாதுகாப்பை நினைத்து அப்போதே பயந்திருக்கிறார். ஏனெனில், இப்போது இருப்பதற்கும் 17 ஆண்டுகளுக்கு முன்பு விமான துறை இருந்ததற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அப்போது, பலரும் விமானியாக ஆன விசயங்களை பரவலாக கேட்டதில்லை. அது அவருடைய தாயாரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டாவது விமானத்தில் பறப்பதும் அவருக்கு பயம் ஏற்படுத்தி உள்ளது. எனினும், மச்சார் விமானியாகும் முடிவுக்கு அவருடைய தந்தை மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. மகிழ்ச்சியுடனேயே அதனை அவர் ஒப்பு கொண்டிருக்கிறார் என மச்சார் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/gripping-interview-with-the-indian-pilot-who-fought-back



