தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை கேரள உள்துறை அமைச்சர் ரமேஶ் சென்னிதலா இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசிக்கவிருக்கிறார். இந்த சந்திப்பின் மையமாக 'ஆபரேஷன் Toofan' இருக்கப்போவதாக கூறுகிறார்கள். இதன் பின்னணி என்ன? ரமேஷ் சென்னிதலா கேரளத்தில் காங்கிரஸ் அரசு அமைந்து வி.டி.சதீஷன் முதல்வரானவுடன், இளைஞர்கள் மத்தியில் பரவியிருக்கும் போதைப் பழக்கத்தை ஒழிக்கவும், போதைப் பொருள் நெட்வொர்க்குகளை கண்டறிந்து வீழ்த்தவும் 'ஆபரேஷன் Toofan' என்ற பெயரில் ஒரு மிஷன் தொடங்கப்பட்டது. இதில் அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூடுதல் கவனம் செலுத்தி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 'மரணத்தின் தூதுவர்களுக்கு எதிராக அரசு நிகழ்த்தும் யுத்தம் இது. போதைப்பொருள்களின் நெட்வொர்க்கை முழுமையாக அழிக்கும் வரை ஓயமாட்டோம்' என்றும் ரமேஷ் சென்னிதலா உறுதியாக பேசியிருந்தார். CM Vijay ஒரு மாநிலம் நினைத்தால் மட்டும் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்திவிட முடியாது. அண்டை மாநிலங்களும் கேரளத்துடன் இணைந்து பயணித்தால் மட்டுமே போதைப்பொருள் நெட்வொர்க்கை கட்டுப்படுத்த முடியுமென ரமேஷ் சென்னிதலா நினைக்கிறார். கடந்த வாரம் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்தும் இதுகுறித்து ஆலோசித்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களின் உயரதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் அதிகாரிகளுடனும் 'ஆபரேஷன் Toofan' குறித்து விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார். தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். இதைத்தொடர்ந்தே இன்று ரமேஷ் சென்னிதால் சென்னை வந்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பில் முதல்வரிடம் ஆப்பரேஷன் Toofan குறித்து விளக்கி தமிழக அரசின் முழு ஆதரவையும் கோரவிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/operation-toofan-why-is-keralas-home-minister-suddenly-meeting-tamil-nadu-chief-minister-heres-the-background




