தனுஷ் பிறந்தநாளையொட்டி, ‘லப்பர் பந்து’ திரைப்பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். தனுஷ் இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் தனுஷ் தற்போது ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, ‘லப்பர் பந்து’ இயக்குநர் இயக்கத்திலும் வெற்றி மாறன் இயக்கும் ‘தமிழ் முருகன்’ திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். ‘கனா, எப்.ஐ.ஆர்’ படங்களில் இணை இயக்குனர் மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ‘லப்பர் பந்து’. தனுஷின் ‘டி56’ படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ளார். தனுஷின் ‘டி56’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ‘ஏஸ், மதராஸி, காந்தாரா’ போன்ற படங்களில் நடித்த ருக்மணி வசந்த் ஆரம்பத்தில் பேசப்பட்டுவந்தார். அவரிடம் அதிக நாட்கள் கேட்கப்பட்டிருந்ததாம். தன்னால் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுக்கமுடியாது என்ற நிலையில், ருக்மிணி வசந்த் இப்படத்திலிருந்து விலகிவிட்டாராம். அதன் காரணமாக தற்போது இளம் நடிகை பிரீத்தி முகுந்தனை இப்படத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ‘லப்பர் பந்து’ திரைப்பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, நடிகர் தனுஷின் ‘டி56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆடி மாதத்திற்குப் பிறகு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கும் என்ற அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டுள்ளார். டிவிட்டரில் தனுஷ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், “உங்களுக்காக ஒரு பிரம்மாண்டமான பிளாக்பஸ்டர் படத்தை இயக்குவேன் என்று நம்புகிறேன், விரும்புகிறேன் மற்றும் உறுதியளிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் D. ” என்று குறிப்பிட்டு அதனோடு, “ஆடிக்கு அப்புறம் பூச ஆரம்பம்” என்று குறிப்பிட்டு அப்டேட் கொடுத்திருக்கிறார். I hope, I wish, and I promise to work towards directing a mass blockbuster for you. Happy Birthday D ❤️ ஆடிக்கு அப்றம் பூச ஆரம்பம் — Tamizharasan Pachamuthu (@tamizh018) July 28, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/lubber-pandhu-director-gives-update-on-dhanushs-d56




