தஞ்சாவூரில் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து திமுக நடத்திய போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசிய விதம் சர்ச்சையாகியிருந்தது. 'இந்த விவகாரத்தை அப்படியே விட்டு விடாதீர்கள். எதிர்த்து களமாடுங்கள்' என்று தவெக தலைமையிடமிருந்து நள்ளிரவில் வந்த உத்தரவைத் தொடர்ந்து உதயநிதிக்கு எதிராக தவெகவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மா.செக்கள் ஒட்டுமொத்த முகாமும் களத்தில் குதித்திருக்கிறது. உதயநிதி இதுதொடர்பாக தவெக-வின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம். "மேகதாது விவகாரமாக நடந்த போராட்டத்தில் சம்பந்தமே இல்லாமல் இரட்டை அர்த்தத்தில் முதல்வரை இழிவுப்படுத்தும் விதமாக உதயநிதி பேசியிருக்கிறார். இது கட்சியின் முக்கியஸ்தர்கள் கவனத்தை எட்டும் முன்பாகவே சமூகவலைத்தளங்களில் விமர்சனத்தை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டது. பத்திரிகையாளர்கள், அரசியல் பேசும் நடுநிலையாளர்கள் பலரும் உதயநிதிக்கு எதிராகக் கருத்து கூறியிருந்தனர். மாலைக்கு மேல் தேசிய ஊடகங்கள் உதயநிதியின் பேச்சைக் கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டன. இதன் பிறகுதான் எங்களின் தலைமையும் உஷாரானது. செங்கல்பட்டு தொழிற்சாலைக்கு ஆய்வுக்காகச் சென்றுவிட்டு அலுவல் பணிகளை முடித்து வீடு திரும்பிய பிறகு தாமதமாகத்தான் முதல்வர் தரப்புக்கும் உதயநிதியின் பேச்சைப் பற்றி தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. CM Vijay பொதுவெளியில் ஒரு பெண்ணின் பெயரை வைத்து இரட்டை அர்த்தத்தில் அவர் பேசியது முதல்வரைக் கொதிப்படைய வைத்திருக்கிறது. இதன்பிறகுதான் தன்னுடைய சகாக்களை அழைத்து இந்த விவகாரத்தை விட்டுவிடாதீர்கள் சட்டரீதியாகவும் கட்சிரீதியாகவும் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள் என முதல்வர் தரப்பு உத்தரவிட்டிருக்கிறது. சகாக்களெல்லாம் ஒன்று கூடி ஆலோசித்து மகளிர் ஆணையத்தில் புகார், மாவட்டங்கள் தோறும் போராட்டம் என முடிவெடுத்திருக்கின்றனர். முதல்வரின் அதிருப்தியையும் வருத்தத்தையும் உணர்ந்து முக்கியமான அமைச்சர்கள் பலரும் நள்ளிரவு 12 மணிக்கு மேலான பிறகும் தலைமையின் உத்தரவின் பேரில் உதயநிதியைக் கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்தனர். Vijay இந்த விவகாரத்தை அத்தனை லேசாக முடித்துக் கொள்ள முதல்வர் தரப்பு தயாராக இல்லை. அதனால் போலீஸ் புகார், போராட்டம், சமூக வலைத்தள விமர்சனங்கள் எனப் பல முனைகளிலிருந்து உதயநிதி மீது அட்டாக் தொடரும்" என்றனர். காலை 11 மணி முதல் தமிழகம் முழுவதும் அத்தனை மாவட்டங்களிலும் தவெகவின் எம்.எல்.ஏக்களும் மா.செக்களும் உதயநிதிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி காவல்நிலையத்தில் புகார் அளிக்கவிருக்கின்றனர். உதயநிதியைக் கைது செய்ய அவரது வீட்டைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றம் செல்லவுள்ளார் உதயநிதி. உதயநிதி சர்ச்சைப் பேச்சு: வீட்டில் போலீஸ் குவிப்பு - பாதுகாப்பா? கைது நடவடிக்கையா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/dont-let-udhayanidhi-issue-die-down-midnight-directive-sends-tvk-ministers-into-action




